Thursday 28 April 2022

எச்.ஐ.வி மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

எச்.ஐ.வி மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

24.4.2022 அன்று பிஷப் ஹீபர் கல்லூரியின் (திருச்சிராப்பள்ளி) சமூகப்பணித்துறை மாணவி செல்வி. சினேகா , முனைவர். கார்டர் ப்ரேம்ராஜ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வானவில் திட்டத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தினார். இதன் சாராம்சம் எச்.ஐ.வி தொற்று உடைய குழந்தைகளுக்கு தேர்வு குறித்த பயத்தை போக்கும் வண்ணமும், அவர்களின் தாய் தந்தையர்களுக்கு எவ்வாறு தேர்வை எதிர்நோக்கும் குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளியின் தலைமை ஆலோசகர் திரு. லெட்சுமணக்குமார் ஐயா அவர்களும் , மன்டையூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. டேவிட்.கிஷோர் அவர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. கூடவே வானவில் திட்டத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சகோதரர் . செபாஸ்டியன் லாசர் தலைமை உரை வழங்கினார். இது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்..

Thursday 8 July 2021

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகரில் சாலையில் கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் கொடுத்து பாராட்டு பெற்றார் 4 ஆம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ்.

பொன்னமராவதி,ஜூலை.8- 

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகரில் சாலையில் கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் கொடுத்து பாராட்டு பெற்றார் 4 ஆம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ். 

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் சாலையில் ஜூலை 8 இரவு 8.30 மணி அளவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 ஆம் வகுப்பு மாணவன்  இளையராஜாவின் மகன் பிரகாஷ்ராஜ்  சாலையில் செல்போன் கிடப்பதை பார்த்துள்ளார்.  நூலிடையில் உயிரை பனையம் வைத்து எதிரே வந்த லாரியை வழிமறித்து செல்போன் உடையாத நிலையில் காப்பாற்றியுள்ளார். மேலும் சாலையில் கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தனபாலன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  இந்த சிறிய வயதில் நான்காம் வகுப்பு படிக்கும் பிரகாஷ்ராஜின் இந்த செயலை கண்டு வியந்த  பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட சக காவலர்கள் சிறுவனை பாராட்டியுள்ளனர். மேலும் ஒப்படைக்கப்பட்ட செல்போன் உரியவரான நெற்குப்பை அரசுப் பள்ளியில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Saturday 2 May 2020

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் பாண்டிமான் கோவில் வீதியில் கபசுர கசாயம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

பொன்னமராவதி மே-2 

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் பாண்டிமான் கோவில் வீதியில் கபசுர கசாயம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் வீதியில் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவாமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுணன் பொதுமக்களுக்கு வழங்கினார்  உடன் துணைத் தலைவர் முத்து,  ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Sunday 26 August 2018

பொன்னமராவதியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வலையப்பட்டி மலையாண்டி கோவிலில் விஸ்வகர்மா மகாஜன சங்கத்தினர் பூணூல் அணியும் விழா நடைபெற்றது.

பொன்னமராவதியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வலையப்பட்டி மலையாண்டி கோவிலில் விஸ்வகர்மா மகாஜன  சங்கத்தினர் பூணூல் அணியும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையப்பட்டியில் உள்ள மலையாண்டி கோவிலில் விஸ்வகர்மா மகாஜன சங்கத்தினரின் ஆவணி அவிட்ட பூணுல் அணியும் விழா நடைபெற்றது. இதில்  விஸ்வகர்மா சங்கத்தலைவர் பராசக்தி தலைமையில்  செயலாளர்  பரமசிவம் மற்றும்  பொருளாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் பொன்-புதுப்பட்டி உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்து கலந்துகொண்ட அனைத்து விஸ்வகர்மா மகாஜன சங்க்த்தினர்கள் அனைவரும் பூணூல் அணிந்தனர். மேலும் இதில் விஸ்வகர்மா மகாஜன கைவினைஞர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்..                                                                

Wednesday 15 August 2018

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசுப்பள்ளியில் ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி ஆக-15

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசுப்பள்ளியில் ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசுப்பள்ளியில் ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 இதில்  ராயல் லயன்ஸ் சங்கத்தலைவர் பழனியப்பன், செயலாளர் மணிகண்டன்,  பொருளாளர் புகேஷ், சந்திரன்,  அன்புச்செல்வன்,  பாலகிருஷ்ணன்,  சரவணன், அன்புச்செல்வன், சரவணன்,  லெட்சுமணன், முருகானந்தம், ஆகியோர் கலந்துகொண்டு சஙகத்தின் சார்பில் பள்ளிக்கு பீரோ, நோட், எழுதுகோல் மற்றும் மரக்கன்றுகள்  வழங்கப்பட்டது. முன்னதாக கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி ஒன்றியத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திரதின விழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

பொன்னமராவதி ஆக-15

பொன்னமராவதி ஒன்றியத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திரதின விழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம சபைக்கூட்டம் பொன்னமராவதி வட்டார தலைவர் கே.செல்வராஜன் தலைமையில் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அலவயல் ஊராட்சி, கண்டியாநத்தம் ஊராட்சி, மைலாப்பூர், தொட்டியம்பட்டி, திருக்களம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில்  நடைபெற்றது.  கூட்டத்தில் பொன்னமராவதி  ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள், முடிவடைத்தும் குடிநீர் விடாமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு உட்பட்டு இருக்கின்றனர்.  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை  பாதுகாத்திடவும்,  ஊராட்சி அமைப்பு தேர்தல் நடத்துடவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
பொன்னமரவதி ஒன்றியத்துக்குப்பட்ட   ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் குறைகள் கேட்டறிந்து  தீர்மானமாக நீரைவேற்றப்பட்டது. முன்னதாக சேசிய கொடியினை வட்டார காங்கிரஸ் தலைவர் ஏற்றினார். உடன் நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர்கள் மணி, தொட்டியம்பட்டி முன்னாள் தலைவர் சோலையப்பன், இராஜேந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆகஸ்ட் 15 நாட்டின் 72 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் சமாபந்தி விழாவும் நடைபெற்றது.

பொன்னமராவதி ஆக-15

பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆகஸ்ட் 15 நாட்டின் 72 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் சமாபந்தி விழாவும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  கொன்னையூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆகஸ்ட் 15,  நாட்டின் 72 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் சமாபந்தி விழாவும் நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இராமசாமி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்று சுதந்திரதின விழா சமபந்தியினை துவக்கிவைத்தார். உடன் வட்டார்சியர் பாலக்கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் வைரவன், திமுக நகரச்செயலாளர் அழகப்பன், திருமயம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய துணை அலுவலர்கள் பஞ்சநாதன், வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், கோவில் அர்சகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.